குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - மீனம்
நேசத்தாலும், அரவணைப்பாலும் அனைவரிடமும் அன்பு செலுத்தும் மீன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு குரு வரும் 26-05-2026 முதல் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது மிக சிறப்பான நற்பலனை பெற்று தருவார். ஜென்ம சனியை குரு பார்வை இடுவது கெடுபலன்களை குறைக்கும். உடல் உபாதைகள் குறைந்து நன்மை பெறுவீர்கள். எதிர்கால நற்பலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குரு பார்வை பெறுமிடம் இன்னும் நல்ல பலனை பெற்று தரும்.
பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு அமர்ந்து ராசியையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் ஓராண்டு சிறப்பு பலனாக அமையும். ராசியில் ஜென்ம சனியை குரு பார்வை பெறுவது உடல் சார்ந்த உபாதைகள் மறையும். செய்யும் செயலில் இருந்து வந்த தடைகள் மறையும். வாழ்க்கை வாழ்வதற்கு என்ற நிலை சரியாக அமையும். யோசித்து வந்த காரியங்கள் செயல்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் விரிவுபடுத்தவும். செம்மை படுத்தவும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். வளர்ச்சி பாதையை நோக்கி செயல்படுவீர்கள்.
பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பது உங்களின் ஆன்மீக ஆர்வம், குருமார்களின் ஆசீர்வாதம் கிடைக்க பெறுவீர்கள். தீர்த்த யாத்திரை சென்று வருதல் ஆன்மீக தேடல் மூலம் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். உடல் சோர்வின்றி ஒயாமல் பணி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவருக்கு உயர் பதவி கிடைக்கும். முதலீடு செய்து தொழில் செய்பவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி கொள்வீர்கள். உங்களுக்கு உதவி செய்ய நம்பிக்கையானவர்கள் வருவார்கள். கவலைகள் மறைந்து உற்சாகம் பெறுவீர்கள்.
20-10-2026 முதல் 22-12-2026 வரை குரு அதிசாரமாக சிம்மத்திற்கு இரண்டு மாதம் செல்கிறார். இதனால் ஆறாமிடத்தில் குரு அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும், தன ஸ்தானத்தையும் பார்வை இடுவது தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ளும் வாய்ப்பு அமையும். தேவையற்ற செலவுகள் குறைந்த லாபஸ்தானம் பலம் பெறுவதால் கிடைக்க வேண்டிய ஆதாயம் தடையின்றி கிடைக்கும். சொல்லிலும், செயலிலும் மேன்மை பெறுவீர்கள். திடமான நம்பிக்கை உருவாகும். தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். நல்ல திட்டங்களுக்கு நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தொடர்ந்து நவகிரக குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கி நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டு குபேர காயத்ரி சொல்லி வர உங்களின் வாழ்வில் குபேர சம்பத்து உண்டாகும். மேலும் வளம் பெறுவீர்கள்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி R.ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554
















