குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - துலாம்
மற்றவரின் வாழ்க்கை மீது அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு மூன்று, ஆறாமிடத்து அதிபதியான குரு பகவான் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் அமர்வது தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதும், பார்வை இடும் இடங்களும் சிறப்பாக நற்பலன்களை தரும். வரும் 26-05-2026 முதல் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாறும். நினைத்ததை அடைய நிறைய விடாமுயற்சி அவசியமாகும். குரு பார்க்க கோடி நன்மை பார்க்குமிடம் சிறப்பு அதனை அனுபவிக்க வேண்டியது அவசியமாகும்.
தொழில் ஸ்தானத்தில் குரு தனித்திருப்பது நல்லதல்ல என்றாலும் வரும் 13-11-2026 கேது இணையும் போது உங்களின் தொழிலில் பல எதிர்பாராத நன்மைகளும், சோதனைகளை தாண்டி நன்மைகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை நிறையேற்றி வைப்பீர்கள். சோதனைகளை சாதனை ஆக்கி காட்டுவீர்கள். அதுவரை தொழிலை விருத்தி செய்யும் முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. ஏற்கனவே இருக்கும் தொழிலை தக்கவைத்துக் கொள்வது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்றிக் கொள்வது சிறப்பு. எதை செய்தாலும் அதில் ஒரு நம்பிக்கை உருவாக்க நினைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தொழிலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தனித்த குரு பத்தில் அமர்ந்தால் பதவி பறிபோகும் என்பது ஜோதிட பழமொழி பரமசிவனுக்கு பத்தில் குரு வந்த போது தான் பிரம்மஹத்தி தோசம் பிடித்து திருவோடு எந்த வேண்டிய நிலை வந்தது. இதனை கருத்தில் கொண்டு தொழிலில் கவனமுடன் இருப்பது நல்லது.
தனஸ்தானத்தை குரு பார்வை இடுவது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செய்யும் தொழிலில் வியாபார விருத்தியை பெறுவீர்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு சுபகாரியம் வீட்டில் நடக்கும். வங்கி வரவு செலவு சிறப்பாக அமையும். கருத்து ஒற்றுமை உண்டாகும். செலவுகளை கட்டுபடுத்தி கொள்வீர்கள். சுகஸ்தானத்தை குரு பார்வை இடுவது வாசலை, வசதிகளை பெருக்கிக் கொள்ள வீடு வாங்க, மனை வாங்க, சேமிப்புகள் செய்ய நல்ல வழி கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வாய்ப்புகள் அமையும். கடன் பெற்று கூட வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
20-10-2026 முதல் 22-12-2026 வரை இரண்டு மாதங்கள் குரு அதிசாரமாக சிம்மத்திற்கு வருவது மிக சிறப்பான பலனாக அமையும். திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சரியான வழியை தெரிவு செய்து பலன் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை உண்டாகும். பூர்வீக சொத்து கிடைக்கும் வாய்ப்பு அமையும். மீண்டும் வக்கிரம் பெறுவது குரு ஆறாமிடத்தை பார்வை இடுவது கடன் பெற்று வங்கி மூலம் பெறுவது மூலம் தொழிலை மிக சிறப்பாக வளபடுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்ததை காட்டிலும் தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். எந்த தொழிலை செய்தாலும் அதில் அபிரிமிதமான வளர்ச்சியும் பொருளாதார மேன்மையும் உண்டாகும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களுக்கு எதிர்கால முன்னேற்றம் உண்டாகும். மக்கள் மத்தியில் நற்பெயரும் செல்வாக்கும் கிடைக்க பெறுவீர்கள். நினைத்தது நன்றாக நடக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகள் தோறும் தொடர்ந்து நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ சாற்றி கொண்டை கடலை. கடலை மிட்டாய் வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் சிறப்பாக அமையும். தொழிலில் கூடுதல் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பிரச்சனையின்றி சுபிட்சம் உண்டாகும்.
















