ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - விருச்சிகம்
தைரியமும், துணிச்சலும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் அட்டம குருவாக அமர்ந்தும், சனி சுகஸ்தானத்தில் அமர்ந்தும் இருப்பது உங்களின் பல கஷ்ட நஷ்டங்களை தந்து வந்தார்கள். இனி பஞ்சம ஸ்தானத்தில் 06.03.2026 முதல் சனி அமர்ந்து செயல்படுவதும். குரு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்று ராசியை பார்வை இடுவதும் உங்களின் பிற்கால பலன்கள் சிறப்பாக அமையும். ராகு மூன்றில் அமர்ந்து முயற்சிகளுக்கு மிக பலன்களை தருவார்.
குரு அட்டமஸ்தானத்தில் இருந்து பொருளாதார முடக்கத்தை தந்தால் எந்த வருவாயுமின்றி கஷ்டங்களை பட்டு வந்தீர்கள். 26-05-2026 முதல் குரு பாக்கியஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் நீண்ட நாள் கோரிக்கை முடிவுக்கு வரும். யோகாதிபதி சந்திரன் வீட்டில் உச்சம் பெறுவதால் உங்களின் அனைத்து வேண்டுதலும் நிறைவேறும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த கேது. குருவுடன் இணையும் போது இன்னும் சிறப்பான நற்பலன்கள் அடைவீர்கள்.
சனி அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்து பல துன்பங்களை அடைந்து வந்தீர்கள். 06.03.2026 முதல் சனி பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தரும். கொடுத்த இடத்தில் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். எதை நினைத்து செயல்படுகின்றீர்களோ அதையே விரைவில் செயல்பட துவங்குவீர்கள். யாரையும் துணைக்கு அழைக்காமல் செயல்படுவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செயல்பாடுகளின் மூலம் வளர்ச்சியை எட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் விரைவில் கைகூடும். பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
9, 3, 2.
அதிர்ஷ்ட மாதம்:
பெப்ரவரி, மே, ஜுலை, நவம்பர்.
பரிகாரங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், நரசிம்மரையும் வணங்கி நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் சிறப்பாக அமையும்.

















