ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - கன்னி
கனவுகளை நனவாக்கி கொள்ள தீரமாக செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதும் உங்களின் வாழ்வில் சிறப்பான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எதை செய்தாலும் அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து செயல்படுவீர்கள். குடும்ப விருத்திக்கு வழி கிடைக்கும். அரசியலிலும், அறிவியலிலும் சிறந்து விளங்குவீர்கள். பொது விடயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும்.
ராசிக்கு மூன்றாமிடத்தில் லாபஸ்தானாதிபதி சந்திரன் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் சூரியனை பார்ப்பதால் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியை தரும். அரசியலில் எதிர்பாராத திருப்பங்களும் அதன் பயனான உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க பெறுவீர்கள். சத்ருஸ்தானத்தில் ராகு அமர்வதால் ராகு சின்ன உடல் உபாதைகளை தருவார். இளம் தெரியாத உடல் நல குறைவு ஏற்படலாம். காத்திருந்து பல காரியங்களை செய்து வந்தீர்கள். இனி உடனே செயல்பட துவங்கும். மறைமுகமான சில எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து ராசியை பார்ப்பது. சிலருக்கு காதல் வெற்றியை தரும். சிலருக்கு போதாத காலமாக இருக்கும். பிறந்த ஜாதகத்தில் சனியில் பலத்தை பொருத்து அமையும். கூட்டு தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அதே நேரத்தில் தொழிலில் போட்டி இருக்கும். தைரியமுடன் செயல்பட வேண்டி வரும். கண்டக சனியை குரு பார்ப்பதால் கெடுபலன் இருக்காது.
அட்டம ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது பல சிறு சிறு கஷ்டங்களை அடைய வேண்டி வரும். யாரை நம்பி செயல்பட்டீர்களோ அவர்களால் நீங்கள் பெரும் துன்பம் அடைய வேண்டிவரும். தெரிந்த நபர்களே நம்மை ஏமாற்றுவது உங்களால் ஏற்க முடியாமல் போகும். பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. விரையாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது இது வரை நிலுவையில் இருந்த காரியம் செயல்பட துவங்கும். பொருளாதார நிலை மேன்மை அடையும்.
தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் புதனுடன் சுக்கிரன் இணைவு பெற்றிருப்பது தர்ம கர்மாதிபதி யோகமாக அமையும். தனியாகவோ அல்லது இணைந்தோ தர்ம காரியம் செய்வீர்கள். கோவில் திருவிழாகளிலும், கோவில் கும்பாபிஷேகத்திலும் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பணிகள் சிறப்பாக அமையும். லாபஸ்தானத்தில் அமர்வது தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப பணவரவு பொருளாதார மேன்மை, தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆசிரியராக பணியாற்றி வருபவர்களுக்கு பதவி உயர்வு இடமாற்றம் போன்ற சூழ்நிலைகள் உருவாகும். உங்களின் எண்ணம் போல வாழ்வு சிறக்கும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் விடயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
11-06-2026 வியாழன் அதிகாலை 04.16 முதல் 16-06-2026 சனி காலை 07.26 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறுகிழமைகளில் மாலை 04.30 - 06.00 மணிக்கு பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமேற்றி எள் கலந்த அன்னம் வைத்து. உங்களின் வேண்டுதலை சொல்லி வர ..,சகல வித காரியமும் அனுகூலமாக அமையும்.
















