ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - கும்பம்
கொண்ட கொள்கையை செயல்படுத்த விடாமல் துடிக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் வாழ்க்கை சூழ்நிலை சிறப்பாக அமையும். குடும்ப சனியாக இருந்தாலும் குரு பார்வை படுவதால் பாதிப்புகள் எதுவும் வராது. அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்கும். வரையிலும் விடாமுயற்சி இருக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
ராசியில் ராகு அமர்ந்து சிந்தனைகளையும், யோசனைகளையும் மறக்க செய்வார். ஆக்கிரமிப்பு எண்ணம் இருக்கும். எதையாவது நினைத்து மனதை குழப்பி கொண்டே இருப்பீர்கள். இதுவரை குரு பார்வை இருந்தால் அதன் பாதிப்பை தெரியாமல் இயலாத இருப்பினும் ராசிநாதன் பலம் பெற்று இருப்பது உங்களுக்கு ராகுவால் வரும் கெடுபலன்கள் வராது தடுத்து விடுவார். தன ஸ்தானத்தில் சனி பகவான் அமர்வது குடும்பத்தில் பல்வேறு குழப்பம் உண்டாகும். நாம் பேசக்கூடாது என்று நினைத்தாலும் எதையாவது பேசி மாட்டிக்கொள்ள வேண்டிவரும். இருப்பினும் குரு பார்வை இருப்பதால் சில நேரம் இந்த சம்பவம் நடக்காமல் போகலாம். ராசிநாதனின் ஆசீர்வாதம் உங்களுக்கு தொடர்ந்து இருக்கும். மூன்றாமிடத்து செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியை தரும். சகோதர ஸ்தானத்தின் பலன் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.
சுகஸ்தானத்தில் சூரியன் அமர்வது உடல்நலனில் அக்கறையை எடுத்துக் கொள்ள வேண்டிவரும். உடலில் உஷ்ண கொப்புளங்கள் சிலருக்கு உண்டாகும். உறுதியுடனான மனநிலையில் சில காரியம் செய்ய துணிவீர்கள். செய்யும் தொழிலில் நேர்மையும், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியும் உங்களின் லட்சியமாக கொண்டு விளங்குவீர்கள். பஞ்சம ஸ்தானாதிபதி புதனுடன் யோகாதிபதி சுக்கிரன் சோதனை காலங்களில் நீங்கள் எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தும் திறன் யோகாதிபதிக்கு உண்டு. யோகாதிபதியின் பார்வை லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார வளம் கிடைக்க உதவியை செய்வார். ஆடம்பரமான வாழ்க்கை, சுகபோக வாழ்க்கை, தடையின்றி அமையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
ஆறாமிடத்து குரு தொழில் ஸ்தானத்தையும் விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் தொழில் சிறப்பாக அமையும். செய்யும் தொழிலை தடையின்றி நன்றாக நடக்கும்படி செய்வீர்கள். அன்றாடம் அழியும் தொழிலில் வியாபாரம் சிறப்பான அமையும். காய்கறி, முட்டை, மாமிசம், உணவுப் பண்டங்கள் விற்பனை நன்றாக இருக்கும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து தொழில் செய்வீர்கள். தொழிலாளர்கள் பற்றாகுறையால் சில நேரம் தொழில் வரும். பின்பு சரியாகி விடும். உங்களின் தொழில் கடன் விரைவில் தீரும். ஏழாமிடத்து கேது சூரியன் செய்யும் வேலை செய்வார். கொடுத்த கடனை திருப்பி தருவீர்கள். நண்பர்களின் தொடர்புகளை குறைத்து கொள்வீர்கள். எல்லாவற்றிலும் உங்களின் செயல்களை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு அவர்களின் சார்ந்த கலை பணிகள் சிறப்பாக அமையும். வரவுக்குள் செலவுகளை சுருக்கி கொள்வீர்கள். எதை செய்தாலும் அதில் ஒரு நியாயத்தை உருவாக்குவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதும் சூரியன் பார்வை பெறுவதும் தொழில் பலம் பெற்று வளம் பெறுவீர்கள். இம்மாதம் உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை பெற்று தரும். குறுகிய கால தொழில் நல்ல வளர்ச்சியை பெறுவதும். பொருளாதார மேன்மையும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
21-06-2026 ஞாயிறு இரவு 09.17 முதல் 24-06-2026 புதன் அதிகாலை 04-57 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் 09.00 - 10.30 மணிக்குள் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகு 27 வெள்ளை துணியில் முடிந்து திரியாக்கி ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும். பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். உடல்நலன் பெறும்.
















