ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - மீனம்

ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - மீனம்

அன்பும், அடக்கமும் கொண்ட மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது சிறப்பான நல்ல பலனை பெற்று தரும். தனாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று பலம் பெறுவது. பொருளாதாரத்தில் வளர்ச்சி கொடுக்கும், செல்வம், செல்வாக்கு, வலிமை பெற்று விளங்குவீர்கள். செய்யும் தொழிலை மதித்து செயல்படுவீர்கள். நிச்சய பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் யாரையும் நம்பி செயல்படமாட்டீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படும் போது எல்லாம் நன்மையாக அமையும்.
 
ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்து மன அமைதியின்மையும் சிந்தனை செயல்களை முடக்கியும் வைத்திருப்பதால் யாரை நம்பி செயல்படுவது என குழப்பம் உண்டாகும். எதை செய்தாலும் இது முழுமை பெறுமா? அல்லது தடைபடுமா? என்ற குழப்பம் நீடிக்கும். சொந்த முயற்சிகளால் எதையும் சாதிக்க முடியும் என்று மனவலிமையை முதலில் நீங்கள் உணருங்கள். ஏனெனில் ராசிநாதன் உச்சம் பெற்று ராசியை பார்வை இடுவது எத்தகைய துன்பமும் எதுவும் செல்வதில்லை என்பதை உணர்ந்து மன வலிமையுடன் செயல்பட்டால் எல்லாம் ஜெயமாகும். நம்முடன் இருப்பவர் நண்பரோ, பங்கு தாரரோ நம்மை விட்டு சென்றால் நமக்கு என்ன ஆகுமென்று கவலையை விட்டு விட்டு தனித்து இயங்க முயற்சி செய்தால்.. எல்லாம் ஜெயமாகும். அதுபோல தன ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது உங்களுக்கு முழுபலனும் கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆவதும். வர வேண்டிய பொருள் தேடி வருவது போன்ற நல்ல பலன்கள் வந்து சேரும். பூமி சார்ந்த வீடு, மனை, பொருள் விற்பனை மந்த நிலை நீங்கி விரைவில் விற்று கடனைத் தீர்த்துக் கொள்வீர்கள். அதற்கான உங்களின் செயல்கள் வெற்றியை தரும்.
 
முயற்சி ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பது நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பக்கபலமாக வெற்றியை பெற்று தருவார். மனதின் பலவீனமே உங்களை செயல்படவிடாமல் தடுக்கிறது என்பதை உணர்ந்தாலே… நீங்கள் மீண்டும் செயல்பட துவங்குவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று இருப்பதும் சுக்கிரன் இணைவு பெறுவதும் வாகன வசதிகளையும், வேண்டிய பொருட்களை வாங்கும் சக்தியும் கிடைக்கும். தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்படும் போது உடன் இருந்து பார்த்துக் கொள்வீர்கள். சிலருக்கு கர்மம் செய்யும் சூழ்நிலை அமையும். பஞ்சம ஸ்தானத்தில் குரு உச்சம் பெற்ற ராசியை பார்ப்பதும் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதும் சிறப்பான நற்பலன்களை தருவார். நீங்கள் எதிர்பார்த்த காரியம் கைகூடும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சில சோதனைகள் வரும். உடன் பங்குதாரர் சனி செயல்பட நினைக்கும் போது வருத்தம் உண்டாகும் என்றாலும் நீங்கள் உள் மனதில் தைரியத்தை வரவழைத்து செயலில் வெற்றி காண்பீர்கள்.
 
குரு பார்வை லாப ஸ்தானத்திலும் படுவதால் இன்னும் உங்களுக்கு ஆறுதலை பெற்று தரும். குருவின் நீச வீடு என்றாலும் சனியின் வீடு என்பதால் குரு அருள் திறம்பட அமையும். குரு பார்வையின் காலம் வரையிலும் நல்ல பலன் கிட்டும். ஆறாமிட கேது உங்களின் அடையாளம் நீண்ட கால தடைக்கு முற்று புள்ளியாக அமைவார். கண்ணை திறந்து எதிரியை அடையாளம் காண்பீர்கள். அவரின் மூலம் இதுவரை பட்ட கஷ்டங்களை உணர்ந்து, அதிலிருந்து விடுதலை பெற முடிவு செய்வீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்வது நீச வீடாக இருந்து ராசிநாதன் குரு பார்வை பெறுவதால் நீச பங்க ராஜயோக பலன்கள் அடைவீர்கள். ஏழரை சனி காலத்தில் கூட ராஜ யோக பலன்கள் உங்களை அடையும் என்பதால் எதையும் யோசிக்காமல் துணிச்சலுடன் செயல்படுவது மிக சிறந்த நற்பலனை பெற்று தரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், நீலம், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
24-06-2026 புதன் அதிகாலை 04.58 முதல் 26-06-2026 வெள்ளிகிழமை மாலை 03.07 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்குள் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீப ஏற்றி வேண்டிக் கொள்ளவும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள மன துணிவும் செயலில் திறமையும் உண்டாகும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554