ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - சிம்மம்
சாதுர்யமும், துணிச்சலும் கொண்டு செயல்களை செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தில் சந்திரனை பார்வை இடுவதும். யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதும் சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். எதை செய்தாலும் அதனை ஆழமாக யோசித்து செய்வீர்கள். கடுமையான சோதனைகளை கூட எளிமையாக செய்து நற்பலன் பெறுவீர்கள். கொடுத்த இடத்தில் இருந்து விரைவில் நல்ல பதில் உங்களை தேடிவரும். எதிரிக்கு கூட கெடுதல் நினைக்காத உங்களின் நல்ல உள்ளத்திற்கு ஒரு தீங்கும் நடக்காது.
ஜென்ம கேது உங்களின் உடல் பலத்தையும், மனிதன் வலிமையும் தந்து பல உதவிகளை செய்வார். இதுவரையில் பல சோதனைகளை சந்தித்து வந்த நீங்கள் இனி அதிலிருந்து நிரந்தர விடுதலையைப் பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் சந்திரன் ராசிநான் சூரியனின் பார்வை பெறுவதால் தாயார், தந்தை உடல்நலன் சிறப்பாக அமையும். நட்பு ரீதியான சந்திப்புகள் சிறப்பாக அமையும். பொது நலன் கருதி நீங்கள் செய்யும் அனைத்து காரியமும் வெற்றியை பெற்று தரும். உங்களை நம்பியவர்களை கைவிட மாட்டீர்கள். கடைசி வரை அவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமூக சேவை செய்வது, முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதில் அமைதி மகிழ்ச்சி கொள்வீர்.
களத்திர ஸ்தானத்தில் ராகு திருமண தடைகளை தந்தாலும் திருமண முயற்சிகள் தொடர்ந்து இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆன்லைன் வர்த்தகம் சிலருக்கு வருமானம் பெற்று தரும். பொது துறையிலும், அரசியலிலும் இருப்பவருக்கு எதிர்பாராத வளர்ச்சியை பெறுவீர்கள். எதையும் யோசிக்காமல் செய்ய மாட்டீர்கள். உங்களின் கருத்துக்கு முன்னுரிமை கிடைக்கப் பெறுவீர்கள். அட்டமத்து சனி குரு பார்வை பெறுவதால் அதிக பாதிப்பை தரமாட்டார். எனினும் பிறருக்கு பிணையம் இடுவதில் அதிக உரிமை எடுத்து செய்வதை.. தவிர்த்து விடுவது நல்லது. இதற்கு முன் ஜாமீன் போட்ட விடயம் கூட.. இப்பொழுது பாதிப்பை கொடுக்க வாய்ப்பாக அமையும் என்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
உங்களின் யோகாதிபதி செவ்வாய் பலம் பெற்று இருப்பது உங்களுக்கு பக்கபலமாக அமையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பீர்கள். லாபஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரனுடன் இணைந்து அமர்ந்திருப்பது பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். சுமையாக இருந்த அனைத்து காரியங்களும் சீராக அமையும். தெய்வ வழிபாடுகள். பரிகார பூஜைகள், அன்னதானம் செய்தல் மூலம் உங்களின் கர்ம வினைகளை தீர்த்து வைக்கும். புதிய திட்டங்களுக்கு சிறிது காலம் பிடிக்கும். அதுவரை சற்று பொறுத்து இருப்பது நல்லது. இனி வருங்காலம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டுமென்று காத்திருக்கும் போது, அதற்குரிய காலத்தில் பரிசுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். குரு விரையத்தில் இருப்பது புதிய தொழில் முயற்சி நல்ல பலனை பெற்று தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, புதன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
08-06-2026 திங்கள் இரவு 11.24 முதல் 11-06-2026 வியாழன் அதிகாலை 04.15 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் (09.00 - 10.30 மணிக்கு) பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வணங்கி வர.. எல்லாம் நன்மையாக அமையும். எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.
















