ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - விருச்சிகம்
சாதிக்க நினைத்ததை விரைவில் சாதித்து காட்டும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்று இருப்பதும் குரு பார்வை பெறுவதும் உங்களின் ராசிக்கு சூரியனின் பார்வை பெறுவதும் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். எதனை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்படி செய்வீர்கள். நம்பிக்கையுடன் செய்யும் எந்த காரியமும் சிறப்பாக அமையும். வரவுக்குள் செலவுகளை கட்டுபடுத்தினால் வளம் பெறுவீர்கள். குறுகிய காலத்தில் உங்களின் வணர்ச்சி மிக சிறப்பாக அமையும். வேண்டியதை தயக்கமின்றி கேட்டு பெறுவீர்கள்.
உங்களின் ராசியில் சந்திரன் நீசம் பெற்று குரு உச்சமான பார்வை பெறுவது நீச பங்க ராஜயோக பலனை பெறுவது சிறப்பு. எதிர்பாராத ராஜயோக பலன்களை பெறுவீர்கள். எதையும் சாதிக்க வேண்டுமென்று எண்ணும் உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சுகஸ்தானத்தில் ராகு அமர்வது உடல்நலனில் முன்னேற்றம் கிடைக்கும். தாயாருக்கு உடல்நல குறைவு உண்டாகலாம். சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் போன்ற வசதிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியம் கைகூட எதையும் செய்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி அமர்ந்து குரு பார்வை பெறுவது குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பு. சனி பார்வை தனஸ்தானத்திற்கு கிடைப்பது. பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முயற்சிகளும் கிடைக்கும். பணபலம் பெருகும்.
ஆறாமிடத்தில் ராசிநாதன் செவ்வாய் அமர்ந்து ராசியை பார்வை இடுவது மிகவும் சிறப்பாக அமையும் கொடுத்த வாக்குறுதியும் காப்பாற்றுவீர்கள். எந்த சவாலையும் முன்னின்று செயல்படுத்துவீர்கள். எதிரிகளின் தடைகளை முறியடித்து காட்டுவீர்கள். புதிய நல்ல திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏழாமிடத்தல் சூரியன் அமர்ந்து ராசியை பார்வை இடுவது தொழில் சிறப்பான வளர்ச்சி பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டி செயல்படுவீர்கள். சாதனைகளை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். அரசியல் வாதிகளுக்கு நல்ல காலமாக அமையும்.
அட்டம ஸ்தானாதிபதியுடன் சுக்கிரன் இணைவு பெறுவது குரு பார்வை ராசிக்கு இருந்தாலும் திருமண தடை இம்மாதம் இருக்கும் சரியான கோணத்தில் உங்களின் செயல்பாடுகள் அமையும். எடுத்த காரியம் சிறுதடையுடன் நிறைவேறும். தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து இருப்பது காரியம் சிறப்பாக அமையும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும் அமைய பெறுவீர்கள். உங்களின் யோகாதிபதி சந்திரனை குரு பார்வை பெறுவது எத்தனை தடைகள் சோதனைகள் வந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்கும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பது வேலை உங்களின் ராசிக்கு இம்மாதம் முழுவதும் சிறப்பான நல்ல பலனை பெற்று தருவார்கள். இனி செய்வதை சரியான கோணத்தில் செய்து கொள்வது மிக சிறப்பு தொழில் சங்க பணிகளை சிறப்பாக செய்து பணியாளர்களுக்கு நல்ல பலனை பெற்று தருவீர்கள். வெற்றி பாதையில் பயணிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
15-06-2026 திங்கள் காலை 09.53 முதல் 17-06-2026 புதன் பகல் 12.24 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று துளசி மாலை போட்டு அர்ச்சனை அபிஷேகம் செய்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர எல்லாம் சிறப்பாக அமையும். எடுத்த காரியம் கைகூடும். பொருளாதார மேன்மை அடையும்.
















