நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - தனுசு

நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - தனுசு

சரியான பாதையை தெரிவு செய்து அதில் பயணம் செய்யும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது யோகாதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்வதும் சிறப்பான பலனாக அமையும். தன்னை புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே பேசுவீர்கள். மற்றவர்களை தவிர்த்து விடுவீர்கள். விடுபட்ட காரியம் செயல்பட துவங்கும். 
 
உங்களின் ராசிக்கு குருவின் பார்வை பெறுவது இதுவரை தள்ளி போய் கொண்டிருந்த காரியம் கைகூடும். எதிர்ப்புகள் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். மூன்றில் ராகு அமர்ந்து உங்களின் முயற்சிக்கு நல்ல பலனை பெற்று தருவார். கடல் கடந்த பயணம் உங்களுக்கு வளமான சூழ்நிலையை பெற்று தரும். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பொது வாழ்விலும் அரசியலிலும் நல்ல ஆலோசகராக இருக்க வழி கிடைக்கும். 
 
சுகஸ்தானத்தில் சனி இருப்பது அடிக்கடி உடல் உபாதைகள் இருக்கும். சில நாட்களில் அதுவே சரியாகும். வசதிக்கு தகுந்தபடி எல்லாம் அமையும். சொந்த தொழில் செய்து வருபவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆன்மீக பயணம் சற்று ஆறுதலை பெற்று தரும். அறிமுகம் இல்லாதவரிடம் பேச்சை குறைத்து கொள்தல் நன்மையை தரும். ஏழாமிடத்தில் சந்திரன் அமைவது பண வரவுக்கு குறை இருக்காது. தாயாருக்கு உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும்.
 
அட்டம ஸ்தானத்தில் விரையாதிபதி அமர்ந்து இருப்பது தொழிலில் எதிர்பாராத நன்மைகளும் பொருளாதார வளர்ச்சியும் அமையும். கமிசன் தொழில் பழைய பொருட்களை வாங்கி விற்பவருக்கு குறுகிய காலத்தில் சரியான லாபம் கிடைக்கும். யோகாதிபதி வீட்டில் ராசிநாதனுடன் கேது இணைவு பெறுவது. எதிர்பாராத அதிர்ஷ்டபலன் அமையும். வயது முதிர்ந்தவருக்கு மருத்துவ வசதிகளும் பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். 
 
லாபஸ்தானத்தில் சூரியனுடன் புதனும், சுக்கிரனும் இணைவு பெறுவது பங்கு மார்க்கெட், ரியல் எஸ்டேட், ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்தல் போன்ற காரியம் ஆர்வமுடன் செயல்பட்டு, வெற்றி கொள்வீர்கள். ஆறின் அதிபதி பதினொன்றில் சிலர் வெளியூர் சென்று வருமானம் ஈட்டுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், வெண்மை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
01-11-2026 ஞாயிறு அதிகாலை 04.58 முதல் 03-11-2026 செவ்வாய் காலை 07.52 மணி வரையும்.
28-11-2026 சனி பகல் 01.10 முதல் 30-11-2026 திங்கள் மாலை 03.49 மணி வரையும்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வெற்றிலை மாலை சாற்றி வேண்டிக் கொள்ள சகல காரியம் சீக்கிரமே நடக்கும்.