நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - கன்னி
திடமான நம்பிக்கையுடன் காரியத்தில் இறங்கும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் தனஸ்தானத்தில் அமர்ந்து அட்டம ஸ்தானத்தை பார்வை இடுவது தடைபட்ட காரியம் சிறப்பாக நடக்கும். சொல்லியபடி நடந்து கொள்வீர்கள். எதையும் சிறப்பாக செய்ய வேண்டுமென்று எண்ணி உன்னிப்பாக கவனித்து செயல்படுவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து செயல் படுவீர்கள். உங்களின் ராசிக்கு தனாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது பொருளாதாரத்திலும் தொழிலிலும் மேன்மை அடைவீர்கள். காலத்தை கடத்தாமல் காரியத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு தொழிலில் வளம் பெறுவீர்கள்.
கலைத்துறையில் இருப்பவருக்கு புதிய ஒப்பந்தங்களும், அனேக இடங்களில் பங்குபற்றும் வாய்ப்பும் அமையும். சோதனை காலங்களில் உதவி செய்வதர்களை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் பணி சிறப்பாக அமையும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரையில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெல்வீர்கள். ஆறாமிடத்தில் ராகு அமர்ந்து சிறுதடைகள் தந்து வந்தார். குரு பார்வையால் ராகுவின் கெடுபலன் நீங்கி வளம் பெறுவீர்கள்.
விரையாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் நீசம் பெற்று இருந்தாலும் சுக்கிரன் ராசி நாதனுடன் இணைவு பெற்றதால் கூட்டு முயற்சிகளுக்கு நல்ல பலன் அமையும். பொருளாதார பெருக்கம் உண்டாகும். ஏழாமிடத்து கண்டக சனி பார்வை ராசிக்கு இருப்பது சற்று சிரமத்தை தரும். கணவன் - மனைவி உறவு சிறு பாதிப்பை தரும். கூட்டு தொழிலில் மனகசப்பு உண்டாகும். வெளிநாடு செல்வதில் தாமதம் உண்டாகும். செல்வாக்கை பெற நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலன் பெற்று தரும்.
தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து வர்கோத்தமம் பெறுவது கிடைத்த தொழில் வாய்ப்பை பயன்படுத்தி வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பது உடல் ரீதியான பாதிப்பை சரி செய்து கொள்வீர்கள். இளைய சகோதரின் மூலம் சிலருக்கு பிரச்சனை சரியாகும். விளையாட்டு துறையில் புதிய தொழில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
விரைய குரு அதிசாரமாக கேதுவுடன் இணைவு பெறுவது வெளிநாடு செல்வது தடைபடும். சிலருக்கு விசா கிடைப்பதில் தாமதமாகும். பள்ளியில் மாணவருக்கு தரமாக கல்வி கிடைக்கும். இதுவரை பட்டகஷ்டம் நீங்கி மேன்மை அடைவீர்கள். எதையும் புரிந்து கொள்ளும் விதமாக அமையும். குறுகிய கால வருமானம் தரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மூட்டு தேய்மான பிரச்சனை வரும். சற்று கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு. வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
22-11-2026 ஞாயிறு அதிகாலை 3.58 முதல் 24-11-2026 செவ்வாய் காலை 08.02 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வெற்றிலை மாலை சாற்றி வேண்டிக் கொள்ள கடுமையான தோசம் நிவர்த்தியாகும் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட தடைகள் நீங்கும்.
















