நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - கும்பம்
குறித்த நேரத்தில் எதையும் செய்து முடிக்க வேண்டுமென்று நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வது பொருளாதார மேன்மையை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் சரியாகும். ஒரு முறை எடுத்த காரியத்தை கடைசி வரை விடாமல் செய்து விட்டு பின்பு அடுத்ததை செய்து கொள்ள வேண்டுமென்று செயல்படுவீர்கள். தனக்கென்று தனி வழியை பின் பற்றுவீர்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது நீங்கள் நினைத்தபடி தொழில் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சியையும் பெறுவீர்கள். ராசிநாதன் சனியின் பார்வையும் லாப ஸ்தானத்தில் பார்வை செய்து நல்ல வளர்ச்சியையும், பொருளாதார நலனும் பெறுவீர்கள். மூன்றாம் அதிபதி ஆறில் மறைவதும், விரைய ஸ்தானத்தையும், ராசியையும் பார்வை இடுவது நல்ல காரியத்திலும்…. கெட்ட காரியத்திலும்… எந்த பலனும் தரமாட்டார்.
எனினும் யாராவது உங்களின் எதிரி இருந்தால் அவர் மூலம் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாவதும் ராசியில் ராகுவை பார்ப்பது முன்னேற்ற பாதையை வகுத்து தருவார். விபரித ராஜயோக பலனை தருவார். குரு பார்வை குறுகிய காலத்தில் நல்ல பதவி மரியாதை பெற்று தரும். கேது குருவுடன் ஏழில் இணைவது சிலருக்கு திருமண நடக்கும். மறுமணம் தடை நீங்கி, விரைவில் திருமணம் செய்து கொள்வீர்கள்.
பாக்கிய ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதி சூரியன் அமர்வது திருமணம் நடக்கும். காதல் திருமணம் கைகூடும். யோகாதிபதி சுக்கிரன் இணைவு பெறுவது நல்ல முன்னேற்றம் கிடைக்கும். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத உங்களின் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படும். அட்டமாதிபதி புதனின் மூன்றாமிடத்து பார்வையால் முயற்சிகள் நன்மையை தரும்.
விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அன்றாடம் அழியும் பொருட்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் கலைத்துறையினர் நல்ல வளர்ச்சியை தருவீர்கள். சகோதரர்களின் உதவியும், அன்பும் பெறுவீர்கள். வெளிநாட்டு உதவிகளும், வேலை செய்பவருக்கு வெளிநாடு சென்று வரும். வாய்ப்பு கிடைக்கும். தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள். எதையும் நிதானமாக செய்து கொள்வது உங்களின் எதிர்கால நலனுக்கு நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
05-11-2026 வியாழன் பகல் 12.12 முதல் 07-11-2026 சனி மாலை 06.39 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு ராகு காலத்தில் (04.30 - 06.00 மாலை) பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு உளுந்து வடை வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் எண்ணம் போல் வாழ்வும் தொழிலில் மேன்மையை பெறுவீர்கள்.
















