நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - மகரம்
விரைவாக எதையும் செய்ய வேண்டுமென்று நினைக்கும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி மூன்றில் அமர்வதும் செவ்வாய் ராசியை பார்வை இடுவதும் செயல்பாடுகளில் விரைவாக செய்து முடிப்பீர்கள். முன் யோசனையுடனும் தெளிவாகவும் செயல்படுவீர்கள். நீண்ட நாள் கடன் தீரும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தொலைதூர செய்தி மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராகு இருப்பது பொருளாதாரத்தில் வளர்ச்சி இருந்தாலும் சிறு காரிய தடை இருக்கும். குடும்பத்தில் சச்சரவு இருந்து விரைவில் மறையும். மூன்றாமிடத்தில் சனி அமர்வது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தருவார். ராசிநாதன் என்பதால் இதுவரை பட்ட கஷ்டத்திற்கு நல்ல விடியலை காண்பீர்கள். எந்த காரியமும் உங்களுக்கு சனி உன்னதமான பலனையும், வாரிசுகளுக்கு நல்ல கல்வியும், நல்ல வேலையும் அமைய உதவி செய்வார்.
ஆறாமிடத்து சந்திரன் விரைய ஸ்தானத்தை பார்வை இடுவது வீடு கட்டுதல், காலி காணி வாங்குதல் போன்ற சுப செலவுகள் உருவாக்குவார் இதனால் உங்கள் ஆசை நிறைவேறும். சுகஸ்தானாதிபதி செவ்வாய் நீசம் பெற்று ராசியை பார்வை இடுவது சிறிது தாமதம் ஆனாலும் உங்கள் வளர்ச்சி உறுதுணையாக இருந்து வருவார். விவசாயம் செழிக்கும். பரம்பரை சம்பிரதாயங்களில் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்.
எட்டாமிடத்து குருவும், கேதுவும் இணைவு பெற்று இருப்பது பொருளாதாரத்தில் ஏற்றம் பெற முடியாமல் சிறுதடைகள் உண்டாகும். எனினும் உங்களின் முயற்சியும் ராசிநாதன் சனியின் அருள் பார்வை பெறுமிடங்களும் உங்களுக்கு வளர்ச்சியின் தடைகளை உடைத்து நற்பலனை பெறுவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்வது வேலையின்றி இருப்பவருக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் ஏற்ற வேண்டிவரும்.
பொது வாழ்வில் சிலருக்கு எதை செய்து காண்பித்து, மக்களுக்கு பயன் தரும் என்று நினைத்தீர்களோ.. அதனை நிறைவேற சந்தர்பபம் அமையும். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சுகஸ்தானத்தை பார்வை இடுவது வீடுகட்டும் வாய்ப்பும். அதற்கு தேவையான பொருளாதார வசதியும் கிடைக்க பெறுவீர்கள். பாக்கியாதிபதி புதன் உடன் இருந்து அதற்கு உங்களின் சமயோசி புத்தி கூர்மையை தந்து வளம் பெற செய்வார். தர்ம காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
03-11-2026 செவ்வாய் காலை 07.53 முதல் 05-11-2026 வியாழன் பகல் 12.11 மணி வரையும்.
30-11-2026 திங்கள் மாலை 03.54 முதல் 02-12-2026 புதன் இரவு 08.04 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ளவும். நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீப ஏற்றி வேண்டிக் கொள்ளவும் நினைத்ததை விரைவில் அடைவீர்கள்.
















