நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - மீனம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - மீனம்

மனதில் வைராக்கியமும், தைரியமும் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிநாதன் குரு ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது மிக சிறப்பான பலனை பெறுவீர்கள். நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட தீர்மானம் செய்தீர்களோ அதனை அடையும் வழியையும் அறிந்து செயல்படுவீர்கள். குறிக்கோளை அடைய பெரிய முன்னேற்றத்தை உங்களுடன் இருப்பவர்கள் மூலம் பெறுவீர்கள். எதையும் விட்டுக் கொடுக்கும் மனம் உங்களுக்கு வரும். துன்பத்தை முழுமையாக தீர்த்து வைக்கும்.
 
உங்களின் ராசிக்கு ராசியில் ஜென்ம சனியின் பாதிப்பு மனஅமைதியின்மையை தந்தாலும் எதையோ இழந்து விட்டது போன்ற எண்ணத்தை உருவாக்குவார் இதற்கு மாற்று வழியை தெரிவு செய்தால் அதிலிருந்து விடுபடுவீர்கள். பூர்வ புண்ணியாதிபதி சந்திரன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது தொழிலில் யோக பலனை பெற்று தருவார். 
 
தனஸ்தானத்தில் செவ்வாய் ஐந்தாமிடத்தில் அமர்வது கிடைக்க வேண்டிய பணபலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் சாதுர்யமான பேச்சின் மூலம் சில காரியம் சிறப்பாக நடக்கும். எதை பிறருக்கு தெரிய கூடாது என்று நினைத்து வெளியில் சொல்லாமல் இருந்தீர்களோ அது இனி எல்லோருக்கு தெரியவரும். உங்களின் கண்ணியம் என்றும் நிலைத்து இருக்கும். உங்களின் மீது உள்ள மரியாதை மேலோங்கும்.
 
ஆறாமிடத்தில் குருவுடன் கேது இணைவு பெறுவது இதுவரை பட்ட கடன் நிவர்த்தியாகும். கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும் முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கும். எட்டாமிட சூரியனால் நல்ல வேலை கிடைக்கும். ராஜயோக பலன்களையும் பெற்று தரும். தடைபட்ட காரியம் அனுகூலம் ஆகும். 
 
வரவுக்கு மீறிய செலவு குறையும். கணவன் மனைவி உறவில் சிறு சச்சரவு உண்டாகும். அதனால் சிலருக்கு மனஉளைச்சல் இருக்கும். எவ்வளவு சோதனை வந்தாலும் அதனை சமாளிக்கும் திடமான மனவலிமை இருப்பதால் கடைசி வரை போராடி வெற்றி பெறுவீர்கள். கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் உங்களுக்கு தனி மரியாதை இருந்தாலும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் வளர்ச்சிக்கு உண்டான பாதை பற்றி யோசித்து செயல்படுவீர்கள். ஆன்மீக சுற்றுலா மன ஆறுதல் பெற்றுத் தரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
07-11-2026 சனி மாலை 06.40 முதல் 10-11-2026 செவ்வாய் அதிகாலை 03.32 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை காலை 09.00 - 10.30 ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து வெண் பூசணியில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு எள் கலந்து அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் சாதகமாக அமையும்.

கணித்தவர்: 

ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554.