நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - மிதுனம்
தேவையான அனைத்தையும் சுயமாக தேடிக் கொள்ளும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பான பலனாக அமையும். ராசியில் சந்திரன் அமர்ந்து ஏழாமிடத்தை பார்வை இடுவது துன்பம் நீங்கி இன்பம் பெருகும். கேள்வி கேட்க முடியாமல் மற்றவர்கள் அமைதியுடன் இருப்பார்கள். போட்டிகளில் வாத திறமையை பெற்று வெற்றி காண்பீர்கள்.
உங்களின் ராசிக்கு லாபாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தில் நீசம் பெற்று அமர்வது பெற்று கல்விக்கு சிறிதும் சம்மந்தமில்லாத பணியை செய்வீர்கள். அனுபவமில்லாத தொழிலை மேற்கொள்வீர்கள். பசியுடன் இருப்பவருக்கு உதவி செய்து, அன்னம் இடுவீர்கள். மூன்றாமிடத்தில் குருவுடன் கேது இணைவு பெறுவது நினைத்ததை அடைய நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனை பெற்று தருவார்கள். பெரிய பூதகரமான காரியம் கூட எளிமையாக நடக்கும். உடல்நலனில் பல நாட்கள் பயந்து கொண்டிருந்த நோய் கடைசியில் ஒன்றுமில்லை என்றவுடன் மனஅமைதியை பெறுவீர்கள்.
சுகஸ்தானாதிபதியான புதன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்வது உடல்நலனில் மேன்மையை அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். நீங்கள் விரும்பிய படிப்பான செயல்கள் வளர்ச்சியை பெற்று திறம்பட செயல்படுவீர்கள். செய்யும் தொழிலில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். முடங்கி கிடந்த சில காரியம் மீண்டும் செயல்பட துவங்கும். எதிரிக்கு கூட துன்பம் நினைக்க மாட்டீர்கள்.
சூரியனுடன் சுக்கிரன் இணைவு பெறுவது பூர்வ புண்ணிய பலன்களை தடையின்றி பெறுவீர்கள். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளவே விரும்பம் உண்டாகும். சட்ட வல்லுநர்களுக்கு வாக்கு வன்மையும்,. வழக்குகளில் வெற்றியும் பெறுவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் ராகு அமர்வது தீர்த்த யாத்திரை சென்று வருதல் வரும் காலம் சிறப்பாக இருக்கும் விதமாக இறையருள் பெற்று திகழ தெய்வ வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.
பணி சுமைகள் குறையும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து கடமை யுணர்வுடன் செயல்படுவீர்கள். அதற்கான பலன்களை பெறுவீர்கள். அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் கொண்டு விளங்கும் காலமாக அமையும். பொது விடயங்களுக்கு நல்ல ஆலோசகராக இருப்பீர்கள். எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு. தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
14-11-2026 சனி இரவு 02.18 முதல் 17-11-2026 செவ்வாய் பகல் 01.03 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு வெற்றிலை மாலை போட்டு வேண்டுதலை சொல்லி வர நினைத்த காரியம் கைகூடும். விருபட்ட காரியம் சிறப்பாக நடக்கும்.
















