நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - ரிஷபம்
துரிதமான செயல்கள் மூலம் எதையும் வெற்றி கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறில் ஆட்சி பெற்று அமர்வதும் குரு பார்வை பன்னிரெண்டில் அமைவதும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், வெளிநாட்டு தொடர்பும் உண்டாகும். தனஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து பண புழக்கத்தையும்., வருமான வாய்ப்பையும் தருவார்கள்.
உங்களின் ராசிக்கு சரியான நேரத்தில் ஒரு காரியத்தை துவங்கும் போது அதனை முடிக்கும் வரை விடாமுயற்சி செய்து வெற்றியை காண்பீர்கள். எந்த தொழில் செய்தாலும் அதன் மீது கவனம் செலுத்தி பொறுப்புடன் இருந்து வருவீர்கள். விரையாதிபதி செவ்வாய்களை நீசம் பெற்று இருப்பது தேவையற்ற செலவீனங்களை குறைத்து வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள். மனதில் இனம் தெரியாத குழப்பமான சூழ்நிலை உருவாகும். ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயம் உண்டாகும். அவசர முடிவுகளால் சில நேரம் சிக்கல் வரும்.
குருவுடன் கேது இணைவு பெறுவது. உங்களின் வளர்ச்சி வழிவகுக்கும். தொழிலில் முன்னேற்றமும் எதிர்பாராத திடீர் வளர்ச்சியும் பெறும் வாய்ப்பு அமையும். சுகஸ்தானத்தில் ஸ்தானதிபதி சூரியன் ஆறில் நீச பங்க ராஜயோகம் பெறுவதால் புதிய வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல், வீடு பராமரிப்பு செய்தல் நல்ல பலனை பெற்று தரும். கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த உறவுகள் வளம் பெறுவார்கள். நிச்சயமான திருமணம் கைகூடும்.
வேற்றுமையுடன் உங்களுக்கு இடையூறு செய்தவர்கள் தானே நிறுத்திக் கொள்வார்கள். ராசிநாதன் சுக்கிரன் ஆறில் ஆட்சி பெற்று பனிரெண்டாம் இடத்தை பார்வை இடுவது வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையும். பஞ்சமாதிபதி புதன் ராசிநாதனுடன் இணைவுகள் பெறுவது. ஆராய்ச்சி அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிதல் போன்ற நுணுக்கமான பேராற்றல்கள் உண்டாகும்.
தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து குரு பார்வை பெறுவது விபரித ராஜயோக பலன்களை தருவார். இதனால் பணியில் மேன்மையும், பாராட்டுதல்களும் அமையும். லாபஸ்தானத்தில் சனி அமர்ந்து ராசியை பார்வை இடுவது நல்ல யோக பலனாக அமையும். உங்களின் ராசிக்கு தர்மகர்மாதிபதி சனி என்பதால் கோவில் கட்டுதல் சார்ந்த பணிகள் சிறப்பாக அமையும். பொது காரியங்களில் நல்ல பெயர் எடுத்து காரிய அனுகூலம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
12-11-2026 வியாழன் பகல் 02.34 முதல் 14-11-2026 சனி இரவு 02.17 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும் செய்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லாம் சிறப்பாக அமையும் எடுத்த காரியம் கைகூடும்.
















