நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - துலாம்
தைரியமும், துணிச்சலும் கொண்டு சிறப்பாக செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆட்சி பெற்று அமர்வது நல்ல சிறப்பு. எதையும் எளிமையாக செய்து விடுவீர்கள். காலத்தை நினைத்து கொண்டு தாமதம் கொள்ளாமல் உடனே செய்து விடுவீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் பெருமிதம் கொள்வீர்கள். அறிவு பூர்வமான செயல்பாடுகளில் ஊக்கபடுத்தி வளர்ச்சியை பெறுவீர்கள். புதிய தொழில் துவங்குவதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.
உங்களின் ராசிக்கு லாபாதிபதி சூரியன் ராசியில் புதனுடன் சேர்ந்திருப்பது செயலில் ஆற்றலையும் தொடர்ந்து முன்னேற்றத்தையும் தருவார்கள். தெளிவான பார்வையும், உறுதியான மனநிலையும் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனை பெற்று தரும். மனரீதியான தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். சூரியன் நீச பங்க ராஜயோக பலன்களை தருவது அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்குகள் உயரும். முக்கிய பிரமுகரின் சந்திப்பு எதிர்பாராத வளர்ச்சியை தரும். நீண்ட நாள் தீராமல் இருந்த பிரச்சனை தீர்வாகும். ஐந்தாமிட ராகு ஆன்மீக பயணம் சென்று வரும் வாய்ப்பை பெற்று தருவார்.
குலதெய்வ வழிபாடுகள் சிறப்பாக அமையும். ஆறாமிட சனி மறைமுக எதிரிகளிடமிருந்து விடுதலை பெறச் செய்வார். பட்ட கடன் தீர்க்க முடியாமல் இருந்த நிலை மாறி, சீக்கிரமே உங்களின் கடன் முழுவதும் அடையும். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து முயற்சி ஸ்தானத்தை பார்வை இடுவதால்.. செயலிலும் சொல்லிலும் திறமையை வளர்த்துக் கொள்ளும்படி அமையும். பணபலம் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து செய்யும் தொழிலில் கவனமாக செயல்பட செய்வார்.
சகோதரர்களிடம் இணக்கமான சூழலை உருவாக்கும். பாதுகாப்புத் துறையினருக்கு சில சவால்களை சந்திக்க வேண்டிவரும். எதையும் துரிதமாக செய்ய வேண்டிவரும். விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் அதனை கையாளும் விதத்தில் சில நுணுக்கங்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். குறைந்தபட்ச உதவிகளை கொண்டு விரைவாக செய்து முடிப்பீர்கள்.
லாபஸ்தானத்தில் குரு இருந்தாலும் பாத ஸ்தானம் என்பதால் பெரிய நன்மை உண்டாகாது எனினும் கேது இணைவு பெறுவது தடைகளை உடைக்கும்படி செய்வார் உடன் இருப்பவர்கள் கூட உங்களுக்கு சரியான வழிகளை காட்டாமல் இடையூறு செய்வார்கள். தைரியமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மூலம் வெற்றியை அடைந்து இலக்கை பெறுவீர்கள். விரையாதிபதி புதன் ராசியில் அமர்ந்து உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் ஆழ்ந்த தூக்கத்தையும் தருவார். இம்மாதம் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, சிவப்பு, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
24-11-2026 செவ்வாய் காலை 08.03 முதல் 26-11-2026 வியாழன் காலை 10.49 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு உங்களின் வேண்டுதலை சொல்லிவர சகல காரியமும் தடையின்றி சுபிட்சமாக நடக்கும்.
















