ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - தனுசு
துணிச்சலும், மனவலிமையும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருந்த ராகு இனி தனஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலிருந்து அட்டம ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்கிறார்கள். ராகு நற்பலன்களையும், கேது கஷ்டங்களையும் தருவார்கள். சிறு தடைகள் வந்து மறையும் திருமண தடை வரும். தொழில் மந்தமாக இருக்கும்.
இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த ராகு இனி தனஸ்தானத்தில் அமர்வதும் குரு பார்வை பெறுவதும் தனவரவுக்கு சிறந்த வழியாக அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். வரவேண்டிய தொகைகளை வரவழைக்க நீங்கள் எடுக்கும். முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ராகு மூன்றாம் பார்வையாக விரைய ஸ்தானத்தை பார்வை இடுவது வெளிநாட்டு தொடர்புகளும், வெளிநாட்டு நண்பரின் தொடர்பும் பெறுவீர்கள். வெளிநாடு செல்ல விரும்பும் உங்களுக்கு அதற்குண்டான வாய்ப்புகள் அமையும்.
அவிட்ட நட்சத்திரத்தில் முயற்சியும், திருவோணத்தில் ராகு வரும் போது வெளிநாடு வேலையும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு சொந்த தொழில் செய்ய பொருள் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல் வாழ்க்கை சிலருக்கு எதிர்பாராத பதவியும், மக்களிடம் செல்வாக்கு பெறும் வாய்ப்பையும் பெறுவீர்கள். செய்யும் தொழிலை மதித்து நடப்பீர்கள். இதுவரை கேது பாக்கிய ஸ்தானத்தில் இருந்தது.. இனி அட்டம ஸ்தானத்தில் அமர்வதும் ராசிநாதன் குருவுடன் இணைவு பெறுவதும், தொழிலிலும், உத்தியோகத்திலும் கவனமுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிட்டும்.
ஆயில்யத்தில் கேது இருக்கும் போது ஆன்மீக புதிய தகவல்கள் வந்து சேரும். கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதையும் எளிதில் கிடைக்க விடாமல் கேது சில தடைகளை செய்து வருவார். பூச நட்சத்திரத்தில் கேது அமரும் போது பொது விடயங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவை இல்லாத பழிச்சொல் ஏற்க வேண்டிவரும் கவனமுடன் இருந்தால் தவிர்க்கலாம்.
கேது எட்டு மாதம் வரையிலும் இந்த பாதிப்பை தருவார் என்பதால் எதிலும் ஒதுங்கி இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கொள்வீர்கள். சிலருக்கு சிறுதடை வந்து மறையும். கேதுவின் மூன்றாம் பார்வை ஆறாமிடத்தில் இருப்பது எதிர்ப்பை தாங்கி கொள்ளும் வலிமை பெறுவீர்கள். கேது 11-ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் இருப்பது செய்யும் தொழிலில் தொழிலாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் சிறப்பாக அமையும்.
பரிகாரம்:
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை போட்டு நெய் தீபமேற்றி சிவப்பு நிறம் கதம்ப பூக்களால் மாலை சாற்றி, வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி திருமணம் விரைவில் நடக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும்.
















