ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - கடகம்

ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - கடகம்

எதையும் சாதிக்க வேண்டுமென்று நினைத்து செயல்படும் கடக ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த கேது இனி ராசியிலும், அட்டம ஸ்தானத்தில் இருந்த ராகு களத்திர ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் செயல்படுவார்கள். தடைகளையும், மன உளைச்சலையும் தந்து வந்த நிலைமாறி, இனி நம்மாலும் முடியும் என்ற நிலையை பெறுவீர்கள்.
 
துவக்கத்தில் ராசியில் கேது குருவுடன் இணைவு பெறுவது சிறந்த பலனை பெற்று தரும். தனஸ்தானத்தில் கேது குருவோடு 20-10-2026 இணைவு பெறுவது குருவால் சில பொருளாதார நிலை பெற்று வந்தீர்கள். அது கேது ராசிக்கு வந்த பிறகும் தொடரும் ஆறு மாத காலம் இந்த பலனை நல்ல முறையில் பெறுவீர்கள். அதன்பின்பு பூசத்தில் கேது இணைவு பெறும் போது சற்று கடினமாக இருக்கும். இது எட்டு மாதம் வரை நீடிக்கும். எதுவும் நிரந்தரமில்லை என்று நிலைபாடு இருந்தால் பொருளாதார இழப்பு இல்லை. 
 
வரவுகளை பார்த்து அதிக முதலீடுகளை போடும் போது இந்த காலநிலையும் அறிந்து போடவேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு குறுகிய காலமாக வைத்து உடனே வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதனை நடைமுறைபடுத்தினால் வெற்றி நிச்சயம் லாப ஸ்தானத்தை கேது பார்வை இடுவதால் இந்த அறிவாற்றல் உங்களை ஊக்கபடுத்தி பலன் பெற செய்யும் மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் முயற்சிக்கு வெற்றியை பெற்று தரும்.
 
இதுவரை ராகு அட்டம ஸ்தானத்தில் இருந்ததால் காரிய தடை இருந்து வந்தது. இனி கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகள், வர்த்த முன்னேற்றம் போன்றவை இனி சிறப்பாக நடக்கும். குரு பார்வை ராகுக்கு இருப்பதால் திருமண தடை நீங்கும் விரைவில் திருமணம் நடக்கும். புதிய நல்ல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு பக்கபலமாக நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது புனித யாத்திரைகள் சென்று வருதல்,  நதி, கடல் நீரை கடந்து சாதிக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். 
 
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ராகு பார்ப்பது முன்ஜென்ம பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு வழிகிடைக்கும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முதலீடுகளுக்கான கடன் வாங்கும் நிலை உண்டாகும். ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்வீர்கள். வரவுக்குள் செலவு செய்து கொள்ள பழகி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உறவுகள் இணக்கமாக இருக்க அரவணைப்பீர்கள். 
 
பரிகாரம்:  
 
பௌர்ணமி நாட்களில் அம்மன் ஆலயம் சென்ற நெய் தீபமேற்றி நவகிரக ராகு / கேதுவுக்கு செவ்வரளி பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மையை பெற்று தரும்.