ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - கன்னி
கவர்ச்சியான பேச்சாலும், திடமான செயலாலும் வளம் பெறும் கன்னி ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் ராகுவும், விரையத்தில் கேதுவும் அமர்ந்திருந்தார்கள். இனிவரும் 13-11-2026 முதல் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது லாபஸ்தானத்திலும் அமர்ந்து செயல்படுவார்கள். ஒன்றரை ஆண்டுகளின் அதிக நற்பலன்களை பெறுவீர்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்ந்து மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் முயற்சிக்கு நல்ல பலனை பெற்று தருவார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் செயல்படுத்தவும் ஊக்கமும் ஆக்கமும் கிடைக்கப் பெறுவீரகள். எதிர்கால நலன் கருதி சில தடங்கல்களை விரைவில் மீட்டு நன்மையைப் பெறுவீர்கள். சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நல்ல பலனை பெற்று தரும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருப்பது காரியதடை தந்தாலும் உங்களின் சொந்த முயற்சிகளுக்கு நல்ல பலனை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை இணக்கமான உறவுகளை தொடர்ந்து பராமரித்து வருவீர்கள். ஏழாமிடத்தை ராகு பார்வை இடுவது திருமண தடை உண்டாகும். குரு பார்வை பெறுவதால் விரைவில் திருமணம் நடக்கும். வீடுமனை வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
லாப ஸ்தானத்தில் கேது குருவுடன் இணைவை பெறுவது பொருளாதார பெருக்கத்தையும் செய்யும் தொழிலில் மேன்மையும் பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தை வீண் செய்யாமல் உடனே எதையும் செய்ய வேண்டுமென்றும் எண்ணுவீர்கள். மூன்றாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தை கேது பார்வை இடுவது உங்களின் நீண்ட நாள் லட்சியத்தை அடைய வழி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடக்கும் செய்யும் தொழிலை விருத்தி செய்து கொள்ள உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தனிப்பட்ட முறையில் சிலருக்கு முக்கியத்துவம் தரமாட்டீர்கள். உங்களின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை செயல்படுத்துவீர்கள். சுய ஜாதகத்தில் யோக தசா புத்தி உள்ளவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும். மற்றவருக்கு பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். கேது பூச நட்சத்திரத்தில் அமரும் காலம் முதலீடுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நண்பராக இருந்தாலும், நெருங்கி உறவுகளாக இருந்தாலும் பண விடயத்தில் கறாராக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் வளர்ச்சியே காணும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு இருபுறமும் இருக்கும் ராகு கேதுவுக்கு நெய் தீபமேற்றி செவ்வரளிபூ போட்டு பானகம் வைத்து (புளி, வெல்லம்) வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.
















