ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - கும்பம்
லட்சியத்தை அடைய கொள்கை பிடிப்புடன் செயல்பட்டு வரும் கும்ப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை ராசியில் இருந்த ராகு விரையஸ்தானத்திலும், ஏழாமிடத்தில் அமர்ந்த கேது ஆறாமிடத்திற்கும் வரும் 13-11-2026 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் அமர்கிறார்கள். இதனால் இதுவரை தடைபட்ட காரியங்கள் இனி சிறப்பாக இயங்கும். நல்ல காரியங்களை செய்ய ஒரு போதும் தயங்கமாட்டீர்கள். நெருக்கடியான சூழ்நிலையில் கூட உங்களின் கொள்கைகளை விட்டு கொடுக்கமாட்டீர்கள். சமயோசிதமாக நடந்து கொள்வீர்கள்.
இதுவரை ஏழாமிடத்தில் இருந்த கேது சத்ருஸ்தானத்தில் குருவுடன் அமர்வதால் மிக சிறப்பான பலனை பெறுவீர்கள். ராகு கேதுவுடன் குரு தொடர்பு எதிர்பாராத நன்மைகளை பெற்று தரும். ஆயில்ய நட்சத்திரத்தில் கேது இணைவு பெறும் போது அதிசார குருவாக சிம்மத்தில் இருந்து மீண்டும் கேதுவுடன் இணைவு பெற்று தீராத கடன் சுமைகளுக்கு நல்ல தீர்வு எட்டும் படி அமைய பெறுவீர்கள். உங்களுக்கு உதவி செய்ய நண்பர்களின் உதவி கிட்டும்.
எதை நினைத்து இதுவரை வருத்தம் கொண்டீர்களோ.. இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். கேதுவின் பார்வை சுகஸ்தானத்தில் அமைவது வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். வீட்டு கட்ட நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் எட்டாம் இடத்து கேது பார்வை சிறு தடைகளை கொடுத்தாலும் உங்களின் விடாமுயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். யாரையும் நம்பி கொண்டு இல்லாமல் நீங்களே தீர்வை நோக்கி பயணம் செய்வீர்கள்.
இனி ராசியில் இருந்த ராகு விரையஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் செய்யும் தொழிலில் பல சவால்களை சந்தித்து சாதனைகளை செய்வீர்கள். எதையும் போராடி பெறுவது என்பது உங்களை பொறுத்த வரை சகஜமாக எடுத்துக் கொள்வீர்கள். பொதுவான எந்த பிரச்சனையும் கையாளும் போது மற்றவரிடம் நீங்கள் கேதுவை ராகு பார்வை இடுவதும் குருவுடன் இணைவு பெறுவது. உங்களின் ஒவ்வொரு செயலுக்கு ஊக்கம் பெற்று வளம் பெறுவீர்கள்.
தனஸ்தானத்தை ராகு பார்வை இடுவது பொருளாதார நலன்களில் கவனம் செலுத்துவீர்கள். தனஸ்தானத்தில் ராசிநாதன் சனி அமர்ந்து குரு பார்வை பெறுவது நல்ல வளர்ச்சியை பெற்று தரும். சரியான காரியத்தை செய்யும் முன்பு எதையும் ஆராயும் வழி நல்லது. விரைய ராகு உங்களின் வெளியூர் பயணம் வெளிநாடு பயணம் சிறக்க வாய்ப்புகளை பெற்று மேன்மையை அடைய செய்வார்.
பரிகாரம்:
நவகிரக ராகு / கேதுவுக்கு ஞாயிறு மாலையும் ராகு காலத்தில் (04.30 - 06.00) மணிக்கு இரண்டு நெய் தீபமிட்டு செவ்வரளிபூ மாலை சாத்தி புளியன்னம் வைத்து வேண்டிக் கொண்டு பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டிய வசதிகளையும் தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
















