ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - மகரம்

ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - மகரம்

திடமான நம்பிக்கையும், பொறுமையும் கொண்டு விளங்கும் மகர ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த ராகு இனி ராசியிலும், அட்டம ஸ்தானத்தில் இருந்த கேது களத்திர ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகள் இநத வீடுகளில் இருந்து பலன் தருவார்கள். உங்களின் ராசிக்கு செயல்பாடுகள் சிறிதாக இருந்தாலும் நல்ல விருத்தியை பெற்று தருவீர்கள். பொருளாதாரத்திலும், பொது வாழ்விலும் சிறிந்து விளங்குவீர்கள். இதுவரை பட்ட கஷ்டம் நீங்க பெறுவீர்கள்.
 
இதுவரை தனஸ்தானத்தில் இருந்த ராகு இனி ராசியில் அமர்வதால்…, எதையும் மேம்போக்காக எண்ணாமல் எதையும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பீர்கள். வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். தொழில் செய்து வருபவருக்கு ராகு லாபஸ்தானத்தை பார்ப்பது நல்ல வளர்ச்சியை பெற்று தருவார். ராகுவின் பார்வை மூன்றாமிடத்தை பார்வை இடுவது வெளியூர், வெளிநாடு பயணம் பற்றி நல்ல தகவல்கள் வந்து சேரும். ஆரம்பத்தில் குரு பார்வையில் ராகு இருப்பதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் கிட்டும். இது நடக்காது என்ற செயல் கூட நடந்து விடும். 
 
கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள். தொழிலாளர்களின் நலனின் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எதை சுமை என்று நினைத்தீர்களோ அதுவே எளிமையாகி விடும். பாதியில் நின்ற காரியம் தடையின்றி நடக்கும். ஆற்றலும், அறிவும் உங்களின் பலமாக அமையும். செய்யும் தொழிலை தெய்வமாக எண்ணுவீர்கள்.
 
இனி கேது அட்டம ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு வருவது கூட்டுத் தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆன்லைன் வர்த்தகம் சிறப்பாக அமையும். பழைய நண்பரின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆன்மீகம் சார்ந்த பயணம் உங்களுக்கு நல்ல ஊக்கத்தை தரும். கேதுவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வது பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சேரும். காதல் செய்து வந்தால் உங்களின் காதலை வெளிபடுத்துவீர்கள். எளிதில் எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். 
 
கேதுவின் பார்வை பாக்கிய தானத்தில் அமர்வது தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்கள் வழிபாடு பரிகார பூஜை செய்து கர்ம வினைகளை போக்கி கொள்ளும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். மருத்துவ துறையினருக்கு வெகுமதியும் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு திருடு போன பொருள் கிடைக்கப் பெறுவீர்கள். பூச நட்சத்திரத்தில் கேது அமரும் போது சில சோதனைகளை சந்திக்க வேண்டிவரும். அந்த காலங்களின் சற்று கவனமாக செயல்பட்டு வந்த நல்ல பலன் உண்டாகும்.

பரிகாரம்:  
 
பௌர்ணமி, அமாவாசை காலங்களில் துர்க்கை, காளிக்கு சிவப்பு பட்டு வாங்கி கொடுத்து நெய் தீபமிட்டு புளி சாதம் படைத்து பக்தர்களுக்கு தானம் செய்து வர உங்களின் அனைத்து வித தடையும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். பொருளாதாரம் மேன்மை அடையும்.