ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - மீனம்
நம்பிக்கையும் எந்த காரியத்தையும் தொடர்ந்து செய்யும் மீன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு விரையஸ்தானத்தில் இருந்து வந்த ராகு இனி லாபஸ்தானத்திலும் கேது ஆறாமிடத்திலிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்கிறார்கள். இதனால் பல வழிகளில் நன்மையும், தீமையும் கலந்தே அமைய பெறுவீர்கள். மனசோர்வு நீங்கி உங்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகும். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்வீர்கள்.
இதுவரை ஆறாமிடத்தில் கேது இருந்து காரியத்தடைகளை பெற்று வந்தீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது உங்களின் முயற்சிகளை தடை செய்து வருவார் மூன்றாம் பார்வையாக எடுக்கும் முயற்சிக்கும் தடங்கல் வரும் என்றாலும்.. குருவின் இணைவாலும் ராசியை குரு பார்வை இடுவதாலும், தடைகள் நீங்கி நன்மை பெறுவீர்கள். குரு 2027 ஜூன் மாதம் பெயர்ச்சி ஆனவுடன் கேதுவும் தாக்கம் சற்று கடுமையாக இருக்கும்.
எடுத்த காரியம் சிறு தடைகளை பெற்று வரும்.. கேது ஏழாமிடத்தை பார்வை இடுவது வெளிநாடு பயணம் சென்று வருதல், கூட்டுத் தொழில் சரியான பாதையில் பயணம் செய்து பலன் பெறுவீர்கள். குறுகிய கால பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். எந்த சூழ்நிலையில் மனம் தலராமல் செயல்படுவீர்கள். சிலரின் ஆதரவு இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் நீங்களை கவனம் செலுத்தி பலன் பெறுவீர்கள்.
இனி விரையத்தில் இருந்த ராகு.. இனி லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவதும், ராசிநாதன் குரு பார்வை ராசிக்கு இருப்பதும்…. தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பாதியில் நின்ற சில காரியம் சிறப்பாக அமையும். வாழ்வாதாரம், வாழ்வுரிமைகளை பற்றி சிந்தித்து அதற்கான முயற்சிகளை செய்து காரியத்தை சரியான வழியில் கொண்டு சென்று நலம் பெறுவீர்கள்.
முதலீடு இல்லாத தொழிலில் நல்ல முன்னே்றறம் உண்டாகும். வரும் 2027 ஜூன் மாதத்திற்கு பின்பு உங்களின் தொழில் மீண்டும் சுறுசுறுப்படையும் அதுவரை லாபமும், நஷ்டமும் கலந்தே வந்து வளம் தரும். கலைதுறையினருக்கும், அசிரியர் பணியில் இருப்பவருக்கு ஓரளவு நல்ல பலனை பெறவீர்கள். ராகுவின் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது தீர்த்தி யாத்திரை சென்று வருவது அமையும். சிலருக்கு வெளிநாட்டு தொடர்பு மூலம் தொழிலில் வளர்ச்சியும் பொருளாதார வளமும் கிடைக்கும்.
பரிகாரம்:
ஞாயிறு ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு ராகு / கேதுவுக்கு நெய் தீபமிட்டு பைரவருக்கு எலுமிச்சை மாலை போட்டு மிளகு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்து வரும். பக்தர்களுக்கு தானம் செய்து வர நினைத்த காரியம் சிக்கீரம் கைகூடும். பொருளாதாரம் மேன்மை அடையும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554
















