ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - மேஷம்
விடாமுயற்சியும், பேரன்பும் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து வந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த கேது சுகஸ்தானத்திற்கு 13-11-2026 முதல் அமர்கிறார்கள். அத்துடன் ஒன்றரை ஆண்டு காலம் வரை உங்களின் வாழ்வை வளம் பெற செய்கிறார்கள்.
இதுவரை ஐந்தாமிடத்தில் கேது அமர்ந்து பல்வேறு தடைகளை செய்து, எதையும் நடக்காமல் தடுத்து வந்தார். இனி பெயர்ச்சிக்கு பின்பு நான்கில் அமர்வது தெளிவான மனநிலையும், பொருளாதார வளமும் பெறுவீர்கள். ஆறு மாத காலம் வரை குருவும் கேது இணைவு பெறுவது பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை பெற்று தரும். கேதுவின் பார்வையால் தனஸ்தானம் பலம் பெறுவதும், எதிர்பாராத மேன்மையும் உண்டாகும்.
ஆறாமிடத்தை பார்வை இடுவது மருத்துவ ரீதியான சிகிச்சை மூலம் விரைவில் குணமடையவும் மருத்துவம் செய்ய வேண்டிய அவசியமில்லாத நிலையும் பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் கேது அமர்வது பூசத்தில் கேது அமரும் போது சில சவால்களை சந்திக்க வேண்டி வரும். எதையும் போராடி பெற வேண்டிய நிலைகள் வரலாம். எட்டு மாதம் தேவையற்ற வம்புகளை தவிர்த்து கொள்வது நல்லது. எதையும் யோசித்து நிதானமுடன் செய்வது நல்லது.
இதுவரை லாபஸ்தானத்தில் இருந்த ராகு இனிமேல் தொழில் ஸ்தானத்தில் அமர்வது உத்தியோகத்தில் இருப்பவருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். ராகு விரைய ஸ்தானத்தை பார்வை இடுவதால் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் வெளிநாடு செல்ல நல்லதொரு வாய்ப்பு கிட்டும். அவிட்டத்தில் ராகு இருக்கும் வரையில் சுமாரான பலனும் திருவோணத்தில் அமரும் போது நல்ல வேலையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
சிலருக்கு அதிகாரத்தில் அமரும் வாய்ப்புகளும் கிட்டும். தொடர்ந்து உத்திராடத்தில் ராகு அமரும் போது எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு செயல்படும் பக்குவம் உண்டாகும். ராகு தொழில் ஸ்தானத்தில் அமரும் போது பணியில் இருந்தாலும் வேறு தொழிலில் ஆர்வம் செலுத்தி பணபுழக்கத்தை உருவாக்கி கொள்வீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எட்டாமிட பார்வை ராகுவுக்கு சில சிக்கல்களை கொடுக்கும் என்பதால் எதிரிடம் கவனமாக இருப்பது நல்லது. எது சரியோ அதை மட்டும் செய்து கொள்வது நன்மையாக அமையும்.
பரிகாரம்:
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மன் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்வதும் வியாழன் அன்று விநாயகர் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டுவதும் உங்களின் தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
















