ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - மிதுனம்

ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - மிதுனம்

சாதுர்யமாக பேசி எந்த காரியத்தையும் சாதிக்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் இருந்த ராகு அட்டம ஸ்தானத்திலும், மூன்றில் இருந்த கேது தனஸ்தானத்திலும் வரும் 13-11-20026 முதல் செயல்படுவார்கள். அட்டமஸ்தானத்தில் ராகு பல சிரமங்களை தந்தாலும் கேதுவின் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள். சரியான நேரத்தில் உங்களின் முயற்சி வெற்றியை பெற்று தரும்.
 
தனஸ்தானத்தில் கேது ஆயில்யத்தில் குருவுடன் இணைவு பெறுவது பொருளாதாரத்தில் மேன்மையையும் உத்தியோகத்தில் சம்பள உயர்வும் பெறுவீர்கள். வேலையின்றி இருந்தவருக்கு நல்ல வேலை கிடைக்கும். இதுவரை யோசித்து கொண்டிருந்த சில காரியம் செயல்படதுவங்கும் பொதுவாக கேது இரண்டில் இருந்தால் திருமண தடை காரியத் தடைகளை உண்டு பண்ணுவார். குருவுடன் இணைவதால் நல்ல பலனை பெற்று தரும். சனி நட்சத்திரமான பூசத்தில் கேது பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உழைப்பு இருக்கும். ஆனால் அதற்கு தகுந்த பலன்கள் இருக்காது. எதையும் போராடி பெற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கைகள் கிடைக்கும். உறவுகளில் சிலருக்கு விரிசல் உண்டாகும். கருத்து ஒற்றுமை இருக்காது. நேர்மை சில நேரம் கைகொடுக்காது. ஒன்றறை வருடம் பாதி கஷ்டமும் பாதி நன்மையும் உண்டாகும். விட்டு கொடுத்தால் எல்லாம் நன்மையே விளையும்.
 
இதுவரை ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் வரை நல்ல பலன்கள் அமைய பெற்றீர்கள். பதவி உயர்வு, பண பயன் கிடைக்கப் பெற்றீர்கள். அட்டம ஸ்தானத்தில் ராகு பல தடைகளை தந்து பலன்களை தாமதப்படுத்துவார். உங்களுடன் இருப்பவர்களுக்கு உடனுக்குடன் பலன் கிடைக்கும் போது எல்லாம் சரியான இருந்தாலும் தடைபடுவது மனதில் வருத்தத்தை உண்டாக்கும். திருமணம் பேசி முடியும் தருவாயில் சிறு பிரச்சனையால் தடைபட்டு விடும் இதற்கு கலங்க வேண்டாம் வழிபாடு மூலம் சரி செய்து விடலாம். ராகு மூன்றாம் பார்வையாக ஆறாமிடத்தை பார்வை இடுவது உடல் நலனின் ஆரோக்கிய குறைபாடு, வைத்தியம் செய்து சரி செய்து கொள்வீர்கள். அனைத்து பரிசோதனையிலும் ஒன்றுமில்லை என்றாலும் கூட உடல் பலவீனமாகவே இருக்கும் இருப்பினும் மருத்துவத்தால் சரி செய்து கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தை ராகு பார்வை இடுவது உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் கூட்டு தொழிலில் அவர்கள் மூலம் வருமானம் கிடைக்க பெறுவீர்கள். உதவிகள் சிலருக்கு கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். இறைவழிபாடு சிறந்த வழியை பெற்று தரும்.
 
பரிகாரம்:  
 
வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் துர்க்கையம்மன் வழிபாடு செய்து விளக்கு எண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் செய்து தானம் செய்துவர கஷ்டங்கள் விலகி தடைகள். நீக்கி வளம் பெறுவீர்கள்.