ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - சிம்மம்
தனக்கென்று தகுதியை வளர்த்து கொண்டு செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு… ராசியில் அமர்ந்த கேது இனி விரையத்திலும், களத்திர ஸ்தானத்தில் இருந்த ராகு இனிவரும் 13-11-2026 முதல் ஆறாமிடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். மறைவு ஸ்தானங்களில் ராகு ./ கேது அமர்ந்து செயல்படுவது நன்மையும், தீமையும் பெறுவீர்கள்.
இதுவரை களத்திரஸ்தானத்தில் இரு்த ராகு ரண, ரோக சத்ரு ஸ்தானத்தில் அமருவது தீராத கடன் பிரச்சனை, இனம் தெரியாத நோய், எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிட்டும். இந்த பலன் அமையாத மற்றவர்களுக்கு சகலவித கஷ்டங்களும் நீங்கும். ராகு மூன்றாம் பார்வையாக சுகஸ்தானத்தை பார்வை இடுவது உடல்நலனின் இருப்பவருக்கு நல்ல தீர்வு உண்டாகும். விரைவில் குணம் அடைவீர்கள்.
ஜாதக தோசம் இருப்பவருக்கு திடீர் நோய் வந்து, அதிக பாதிப்பை தரும்.. தீர்க்க முடியாத கடன் இருந்தவருக்கு புதிய கடன் வசதி மூலம் கடன் அடைக்க வழி கிடைக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து மரியாதை கூடும். உங்களுக்கு என்று சில சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது இருந்த பல குற்றங்கள் குறைபாடுகள் நீங்கி உண்மை வெளிபடும். நன்மை உண்டாகும்.. பொருளாதார வளம் பெறுவீர்கள்.
ராசியில் அமர்ந்த கேது விரைய ஸ்தானத்தில் அமர்ந்து தெளிவான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையை பெறுவீர்கள். கருத்து வேற்றுமையுடன் இருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி இணைந்து வளம் பெறுவீர்கள். சரியான முடிவுகளை எடுத்து எதிர்ப்புகளை வென்று வளம் பல பெறுவீர்கள் கனவுகளை நனவாக்கி கொள்வீர்கள். வெளிநாடு பயணம் செல்ல எடுத்த முயற்சிகள் வெற்றியை தரும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள். அரிய பல ஆன்மீக தகவல்களை பெற்று வளம் பெறுவீர்கள். நல்லவர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு தருவது புதிய முயற்சிக்கு பக்க பலமாக அமையும்.
குருவுடன் கேது இணைவு பெறுவது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தடைபட்ட காரியம் செயல்படதுவங்கும். தொழில் ஸ்தானத்தை கேது பார்வை இடுவது உழைப்பாலும் மன உறுதியாலும் தொழிலை சிறப்பாக கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க பெறுவீர்கள். இடைக்காலத்தில் சில கஷ்டங்கள் வந்தாலும் எளிதில் வெற்றியைப் பெறுவீர்கள். இரக்க குணமும் விட்டு கொடுக்கும் மனநிலையும் உங்களின் வாழ்வில் வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். எத்தனை உயர்பதவியில் இருந்தாலும் பணிவாக இருந்தால் எல்லாம் சிறப்பாக அமையும்.
பரிகாரம்:
பௌர்ணமி நாட்களில் நாக தேவதைக்கு மஞ்சள் பால் வைத்து புளியன்னம் வைத்து வேண்டுதலை சொல்லி தானம் செய்துவர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும். பொருளாதாரம் தன்னிறைவு பெறும்.
















