ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - துலாம்

ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - துலாம்

திட்டமிட்டு செய்யும் காரியங்களில் முழு கவனம் செலுத்தும் துலாம் வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை ராகு ஐந்தாமிடத்தில் இருந்து வந்தவர் இனி சுகஸ்தானத்திற்கும் லாபஸ்தானத்தில் இருந்த கேது இனி தொழில் ஸ்தானத்திற்கும் வரும் 13-11-2026 முதல் ராகு / கேது அமர்ந்து பலன் தருகிறார்கள். கேந்திர ஸ்தானத்தில் அமர்வது நற்பலன்களை கொடுப்பார்கள்.
 
சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பொருளாதாரத்திலும், தொழிலிலும் நல்ல வளர்ச்சியை பெற்று தருவார். ராகு கொடுக்க கூடிய இடத்தில் இருப்பதால் தடையற்ற வருமானம் கிடைக்க பெறுவீர்கள். செய்யும் தொழிலில் உங்களின் கவனம் பலமடங்குகள் இருந்து வருவது மேன்மையை பெற்று தரும். வண்டி வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றிக்கு வழி கிடைக்கும். 
 
ராகுவின் பார்வை ஆறாமிடத்திலும் இருப்பது இதுவரை பட்ட கடன்கள் படிப்படியாக தீர்த்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுவீர்கள். பல நாள்பட்ட வழக்குகளில் நல்ல மாற்றம் உண்டாகும். விரைவில் தீரும் சந்தர்ப்பம் அமையும். கருத்து வேறுபாடுகளை மறந்து இணக்கமான சூழ்நிலை உருவாகும். யாரையும் நம்பிக்கொண்டு இல்லாமல் உங்களுக்கென்று நீங்களே செயல்பட்டு நன்மை பெறுவீர்கள்.
 
இதுவரை லாபஸ்தானத்தில் இருந்த கேது தொழில் ஸ்தானத்தில் அமர்வதும் விரையஸ்தானத்தை கேது பார்வையிடுவது வெளிநாடு தொடர்புகள். வெளிநாட்டு வர்த்தங்கள் வெளிநாட்டு வேலை சம்மந்தமான பல வாய்ப்புகள் இனி உங்களை தேடிவரும். ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு சொந்த ஊரில் சொந்த தொழில் துவங்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். கேதுவுடன் குரு இணைவு பெறுவது செய்யும் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை பெற்று வளம் பெறுவீர்கள். 
 
கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த தடைநீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். உறவுகளும். நண்பர்களும் இனி உங்களுக்கு நல்ல அனுசரணையை தருவார்கள். கேதுவின் பார்வை எட்டாமிடத்தில் அமைவது கெட்ட குணமுள்ள சில நண்பர்களின் நட்பு இருந்தாலும் அவர்களிடம் அதிக தொடர்புகளை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மையை தரும். குடும்பத்தில் சின்ன சச்சரவு வந்து மறையும். உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீக தொடர்பு உங்களுக்கு நல்ல வழிகாட்டுதலாக அமையும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். பணபுழக்கம் ஒன்றாக இருக்கும்.
 
பரிகாரம்:  
 
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து எருக்கன் மாலை போட்டு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வெள்ளை நிறத்தில் பூ வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நடக்கும் வெற்றி உண்டாகும்.