ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - விருச்சிகம்

ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - விருச்சிகம்

மனவலிமையும், கொள்கை பிடிப்பும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை சுகஸ்தானத்தில் இருந்த ராகு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்தில் இருந்த கேது பாக்கிய ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்ந்து பலன் தருவார்கள். நினைத்த காரியம் நினைத்தபடி நடக்க எல்லா உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.
 
இதுவரையிலும் சுகஸ்தானத்தில் இருந்து வந்த ராகு இனி மூன்றாமிடத்தில் அமர்வது யோக பலன்களையும், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனையும் பெற்று தருவார். ராகுவுக்கு  குரு பார்வை பெறுவது மேலும் சிறப்பான பலன்களை பெறும் வாய்ப்பு அமையும். ராகு மூன்றாம் பார்வையாக உங்களின் ராசியை பார்ப்பது எடுத்த காரியம் கைகூடும். நினைத்தபடி சில காரியம் நற்பலன்களை பெற்று தரும். 
 
குடும்பத்தில் மகிழ்ச்சியும், எதிர்ப்புகள் குறைந்து வளர்ச்சியையும் பெற்று வருவீர்கள். ராகுவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வையிடுவதால்.. அங்கு சனி அமர்ந்து குரு பார்வை பெறுவதும், முன் ஜென்ம தோச பரிகாரம் செய்து, இந்த பிறவி பயனை அடைய பரிகார பூஜைகள் செய்வீர்கள். சிலருக்கு ஜாதக தோசம் இதன் மூலம் சரியாகும். தொழிலாளர்களின் நலனை காக்கும் பொறுப்புகள் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி செயல்படுவீர்கள்.
 
கேது தொழில் ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல பலனை பெற்று தரும். குரு கேதுவுடன் இணைந்து உங்களின் ராசியையும், ராகுவையும், சனியையும் பார்வையை இடுவது கெடுபலன்களை தரும். கிரகங்களின் பாதிப்பை குறைத்து நன்மையை பெறுவீர்கள். கேது மூன்றாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவது சிலருக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும்.
 
வீண் வாக்குவாதத்தை குறைத்து காரியத்தில் கண்ணாக இருந்து செயல்படுவீர்கள். கேதுவின் பார்வை லாபஸ்தானத்தில் அமைவது நல்ல வளர்ச்சியை பெற்று தரும். புனித யாத்திரை சென்று தீர்த்தம் ஆடுதல், ஆன்மீக பயணம் சென்று வருதல், மகான்களின் தரிசனம், பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பல நாட்கள் வராத கடன் தொகைகள் வசூலாகும். மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிரிந்த உறவுகள் வந்து இணைவார்கள். உடல் நலனின் கவனம் செலுத்தி வளம் பெறுவீர்கள்.
 
பரிகாரம்:  
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு பைரவர் வழிபாடு செய்து நவகிரக ராகு / கேதுவுக்கு நெய் தீபமேற்றி செவ்வரளி பூ வைத்து வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.